மரக்காணம் | கள்ளச்சாராய சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியர் உறுதி

By ந.முருகவேல் 


விழுப்புரம்: மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும், 22 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 10 பேர விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் மரக்காணம் அரசு மருத்துவமனையிலும், 2 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும், ஒருவர் புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவமனையிலும், ஒருவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சைப் பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் சி.பழனி நேரில் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரத்யேக சிறப்பு சிகிச்சை அறை ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மரக்காணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 5 நபர்களை விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

22 hours ago

தமிழகம்

23 hours ago

தமிழகம்

1 day ago

மேலும்