கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சித்திரை பெருவிழா - 3 புஷ்ப பல்லக்கில் சுவாமிகள் வீதியுலா புறப்பாடு

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி மணித்தட்டிகளாலான 3 புஷ்ப பல்லக்கு வீதியுலா புறப்பாடு நேற்று நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கடந்த மாதம் 26-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 12-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் புறப்பாடும், முக்கிய நிகழ்வான தேரோட்டம் மற்றும் தீர்த்தவாரி கடந்த 4-ம் தேதியும் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு மணித்தட்டிகளால் அலங்கரிக்கப்பட்ட 3 புஷ்ப பல்லக்கில் ஸ்ரீ சாரங்கபாணி, ஸ்ரீசக்கரபாணி, ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் ஆகிய 3 சுவாமிகளின் வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சிறப்பலங்காரங்களில் காட்சியளித்த 3 சுவாமிகளையும் தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்