கும்பகோணம் பெண் போலீஸாருக்கு முதன் முதலாக நட்சத்திர காவலர் விருது

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் போலீஸார், சிறப்பாக செயலாற்றியதற்காக முதன் முதலாக இந்த மாதத்திற்கான நட்சத்திர விருது நேற்று வழங்கப்பட்டது.

கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சுப்புராஜா, தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றத்தில் திறமையாகச் செயல்பட்டு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் தண்டனை பெற்றுக் கொடுத்தும், பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 2 லட்சம் அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளும் வகையிலும் திறமையாகச் செயல்பட்டார். இவரை கவுரவிக்கும் வகையில் இந்த மாதத்திற்கான நட்சத்திர விருதை, டிஎஸ்பி பி.மகேஷ்குமார் வழங்கினர்.

கும்பகோணம் உட்கோட்ட காவல் துறையில் முதன்முதலாக விருது பெற்ற இவருக்கு, சக போலீஸார் பாராட்டு தெரிவித்தனர். இதேபோல் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களையும், தலைமறைவாக இருந்தவர்களையும் கைது செய்த போலீஸாருக்கு ரொக்கப்பரிசும், நினைவுப் பரிசுகளும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் சி.நாகலெட்சுமி, ஆர்.சரவணகுமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்