68 ஆண்டு அரசியல் பந்தம்: திமுக உறுப்பினராக புன்னகையுடன் புதுப்பித்துக்கொண்டார் கருணாநிதி

By மு.அப்துல் முத்தலீஃப்

திமுகவின் முதல் உறுப்பினராக மீண்டும் தன்னை புதுப்பித்துக்கொண்டார் கருணாநிதி. இதற்கான படிவத்தை கருணாநிதியிடம் காட்டி மு.க.ஸ்டாலின் விளக்கினார். அதை முக மலர்ச்சியுடன் கருணாநிதி ஏற்றுக்கொண்டார்.

திமுக அரசியல் கட்சியாக உதயமாகி 68 ஆண்டுகள் ஆகிறது. இன்று பெரிய கட்சியாக தமிழகத்தில் உள்ள திமுக உதயமானது 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று தான். திராவிடர் கழகத்திலிருந்து கருத்து வேறுபாடு காரணமாக அண்ணாதுரை தலைமையில் ஐம்பெரும் தலைவர்கள் தலைமையில் திராவிடர் கழகத்திலிருந்து விலகி திமுக என்ற கட்சியை தோற்றுவித்தனர்.

கண்ணீர் துளிகள் என்று பெரியாரால் விமர்சிக்கப்பட்ட திமுகவில் தலைவர் நாற்காலியை பெரியாருக்காக விட்டு வைத்திருக்கிறேன் என்று அண்ணா அறிவித்து பொதுச்செயலாளர் பதவியை ஏற்றார்.

ராயபுரம் ராபின்சன் பூங்காவில் பெரியார் மீது அதிருப்தி கொண்டு தொடங்கப்பட்ட திமுக பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்றுதான் துவக்கப்பட்டது என்பது சிறப்பு. ஆரம்பத்தில் 1952 சட்டப்பேரவை தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. 1957-ல் 15 தொகுதிகளில் திமுக வென்றது.

இதில் குளித்தளையில் போட்டியிட்டு கருணாநிதி வென்றார். 1962 சட்டப்பேரவை தேர்தலில் 50 இடங்களை திமுக வென்றது. இதில் தஞ்சாவூர் தொகுதியில் கருணாநிதி வென்றார். 1967 ல் திமுக ஆட்சியை பிடித்தது. 1969 அண்ணா மறைவுக்கு பிறகு திமுகவின் தலைவராக கருணாநிதி பொறுப்பேற்றார்.

முதல்வராகவும் ஆனார். பின்னர் 1971 சட்டப்பேரவை தேர்தலில் திமுக முன்னெப்போதும் பெறாத பெரிய வெற்றியை பெற்றது.

1973-ல் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய பின்னர், 1977, 80, 84 தேர்தலில் திமுக சரிவை சந்தித்தாலும் அதன் அசைக்கமுடியாத தலைவராக கருணாநிதி இருந்தார்.

1989 ல் மீண்டும் ஆட்சியை பிடித்த திமுக அதன் பின்னர் 96, 2006 என இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டு முழுமையான ஆட்சியை நடத்தியது. திமுக தலைவராக கருணாநிதி தொடர்ந்து செயல்பட்டு வந்தார். இன்றும் தனது வயோதிகம் காரணமாக முடங்கி போனாலும் அவரே திமுகவின் தலைவராக 49 ஆண்டுகளாக தொடர்கிறார். சட்டப்பேரவை உறுப்பினராக தோல்வியே இல்லாதவராக இன்றும் தொடர்கிறார்.

அண்ணா மறைவுக்கு பின்னர் மூன்றாண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் திமுக உறுப்பினர் படிவத்தில் கருணாநிதி முதல் உறுப்பினராக கையெழுத்திடுவார். பின்னர் அது ஐந்தாண்டு என மாற்றப்பட்டது. 1949 முதல் கருணாநிதி 68 ஆண்டுகள் திமுக உறுப்பினராக இருந்து வருகிறார். அவருடன் ஆரம்பகால உறுப்பினராக பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட வெகு சிலரே இன்றும் தொடர்கின்றனர்.

திமுகவின் உறுப்பினர் சேர்ப்பை ஒட்டி முதல் உறுப்பினர் என்ற முறையில் திமுக தலைவர் கருணாநிதியிடம் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் படிவத்தை பூர்த்தி செய்து ஒப்புதல் வாங்கினர். அவர்களிடம் சிரித்துக்கொண்டே முகமலர்ச்சியுடன் தன் இசைவை கருணாநிதி தெரிவித்ததாக திமுக தலைவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்