ஆம்பூர் | ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம்

By செய்திப்பிரிவு

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டத்துக்கு உட்பட்ட நாய்க்கனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மங்கை. கர்ப்பிணியான அவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

தொடர்ந்து, அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைத்ததும் மருத்துவ உதவியாளர் ராஜேஷ், ஓட்டுநர் சக்திவேல் ஆகியோர் விரைந்தனர். பிரசவ வலியில் இருந்த மங்கையை பரிசோதித்த அவர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு ஆம்பூர் அரசு மருத்துவமனை நோக்கி விரைந்தனர். நாயக்கனேரி வனப்பகுதி வழியாக சென்றபோது மங்கைக்கு பிரசவ வலி அதிகரித்தது.

வேறு வழியின்றி சாலையோரம் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு மருத்துவ உதவியாளர் ராஜேஷ் பிரசவம் பார்த்தார். அதில் மங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருந்ததால் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருவரும் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்