குடியாத்தத்தில் நாளை கெங்கையம்மன் கோயிலில் சிரசு திருவிழா: சிறப்பு காவல் படை பாதுகாப்பு; டிஐஜி முத்துசாமி தகவல்

By செய்திப்பிரிவு

குடியாத்தம்: குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலில் சிரசு திருவிழா நாளை நடைபெறவுள்ள நிலையில் திருவிழா பாதுகாப்பு பணியில் முதல் முறையாக சிறப்பு காவல் படையினர் ஈடுபடவுள்ளனர் என வேலூர் சரக டிஐஜி முத்துசாமி தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கெங்கையம்மன் கோயிலில் சிரசு திருவிழா நாளை காலைகோலாகலமாக நடைபெறவுள்ளது. திருவிழாவில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவை முன்னிட்டு காவல் துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முத்தியாலம்மன் கோயிலில் புறப்படும் சிரசு ஊர்வலம் பக்தர்கள் வெள்ளத்தில் கெங்கையம்மன் கோயிலை வந்தடையும். குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழாவுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆற்காடு, ராணிப்பேட்டை, ஆம்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து குடியாத்தத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கவுள்ளன.

திருவிழாவையொட்டி குடியாத்தம் நகரில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பேரணாம்பட்டு சாலை, மேல்பட்டி சாலை, வேலூர் சாலைகளில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்கள் வந்து செல்லும் சாலையில் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கெங்கையம்மன் கோயிலில் சிரசு திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேர் திருவிழா இன்று நடைபெறவுள்ளது.

கெங்கையம்மன் கோயிலில் இருந்து இன்று காலை புறப்படும் தேர், சிரசு ஊர்வலம் வரும் பாதையில் சென்று முத்தியாலம்மன் கோயிலை அடைந்து பின்னர் கெங்கையம்மன் கோயிலை மீண்டும் வந்தடையும். தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வதுடன் தேரின் மீது மிளகு, உப்பு தூவி நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். தேர் திருவிழாவை மாலை 6 மணிக்குள் முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

டிஐஜி நேரில் ஆய்வு: இந்நிலையில், குடியாத்தம்கெங்கையம்மன் சிரசு திருவிழாவுக்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகளை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர், செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா பாதுகாப்பு பணியில் 2 எஸ்.பி.,க்கள், 5 ஏடிஎஸ்பி-க்கள், 13 டிஎஸ்பிகள் உள்பட 1,700 காவலர்கள் ஈடுபடவுள்ளனர். முதல் முறையாக 2 பட்டாலியன் சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். பக்தர்கள் சிரமம் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

அப்போது, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், டிஎஸ்பி ராமமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்