மாநிலத்தின் மொத்த உரத்தேவையில் 43 சதவீதம் இருப்பு உள்ளது: தமிழக அரசு

By செய்திப்பிரிவு

சென்னை: "முன் எப்போதும் இல்லாத வகையில், ஏப்ரல் முதல் செப்டம்பர் முடிய உள்ள கோடை, குறுவை, முன்சம்பா பருவத்திற்குத் தேவையான மொத்த உரத் தேவையில் 43 சதவீத உரங்கள் தற்போது மாநிலத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது" என்று தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலன்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தியில், வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவரும் தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து இடுபொருட்களும் காலத்தே கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது, கோடை மழை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பெய்து வருகிறது. மேலும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடிக்கும் அதிகமாக உள்ளதால், நடப்பாண்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிப்பரப்பு சென்ற ஆண்டினைப் போலவே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசாயன உரங்களை முன்னரே இருப்பு வைக்க நடவடிக்கை: தமிழ்நாட்டில் நடப்புக் கோடைப்பருவம், குறுவை நெல் சாகுபடி மற்றும் இதர வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்குத் தேவையான ரசாயன உரத் தேவையினை முன்னரே கணக்கிட்டு, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருப்பு வைக்க வேளாண்மைத்துறை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் முடிய உள்ள காரிப் பருவத்திற்கு, 4,23,000 டன் யூரியா, 1,45,000 டன் டிஏபி, 1,20,000 டன் பொட்டாஷ், 3,00,000 டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 50,000 டன் சூப்பர் பாஸ்பேட் ஆக மொத்தம் 10,38,000 டன் உரங்கள் தேவைப்படுகிறது என கணக்கிடப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் உரத்துறையுடன் தொடர்ச்சியாக தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டிற்குத் தேவையான உரங்களைப் பெற்று, இருப்பு வைப்பதற்கு நடவடிக்கை எடுத்ததன் காரணமாக, இன்றைய தேதி (12.05.2023) நிலவரப்படி, 1,66,311 டன் யூரியா, 71,580 டன் டிஏபி, 12,528 டன் பொட்டாஷ், 1,86,011 டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 19,138 டன் சூப்பர் பாஸ்பேட் ஆக மொத்தம் 4,55,568 டன் உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும், தனியார் உர விற்பனை மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

முன் எப்போதும் இல்லாத வகையில், ஏப்ரல் முதல் செப்டம்பர் முடிய உள்ள கோடை, குறுவை, முன்சம்பா பருவத்திற்குத் தேவையான மொத்த உரத் தேவையில் 43 சதவீத உரங்கள் தற்போது மாநிலத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதாவது, யூரியா தேவையில் 39 சதவீதமும், டிஏபி தேவையில் 50 சதவீதமும், காம்ப்ளக்ஸ் தேவையில் 60 சதவீதமும், சூப்பர் பாஸ்பேட் தேவையில் 38 சதவீதமும் இருப்பு உள்ளது.

பொட்டாஷ் உரத்தைப் பொறுத்தவரை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு தேவையான பொட்டாஷ் உரம் நியூ மங்களூர் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாது, மே மாதம் 3 ஆம் வாரத்திற்குள் 43,000 டன் இறக்குமதி பொட்டாஷ் உரத்தை தூத்துக்குடி துறைமுகத்தின் மூலம் கொண்டு வரவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்