சென்னை: அனைத்துப் பிரிவுகளிலும் ஒட்டுமொத்தமாகச் சிறந்து விளங்கியதற்காக, சென்னை, காமராஜர்துறைமுகங்களுக்கு மத்திய அரசின் ‘சாகர் சிரஷ்தா சம்மான்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள முக்கியத் துறைமுகங்களைப் பசுமைத் துறைமுகங்களாக மாற்றுவதற்கான ‘ஹரிதசாகர்’ என்ற திட்டத்தை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறைஅமைச்சர் சர்பானந்த சோனோவால் டெல்லியில் கடந்த புதனன்று தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில், கடந்த 2022-23-ம் நிதியாண்டில் சிறப்பாகச் செயல்பட்ட துறைமுகங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில்,கடந்த நிதியாண்டின் ஒட்டுமொத்த செயல் திறனுக்கான மத்திய அரசின் ‘சாகர் சிரஷ்தா சம்மான்’ விருது சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகத்துக்கு வழங்கப்பட்டது.
சென்னை துறைமுகத்தின் துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன், காமராஜர் துறைமுகத்தின் பொது மேலாளர் சஞ்சய் குமார், அதிகாரிகள் விருதை பெற்றுக் கொண்டனர்.
» அமர்நாத் யாத்திரைக்கு 2,500 மொபைல் கழிப்பறைகள்
» போலி இணையதளங்களில் ஏமாறாதீர்கள் - திருப்பதி தேவஸ்தான அதிகாரி வேண்டுகோள்
விழாவில் பேசிய விஸ்வநாதன், ``பெருமைக்குரிய இவ்விருது கிடைத்திருப்பதன் மூலம், துறைமுக ஊழியர்களுக்கு ஊக்கம் அளிப்பதுடன், இன்னும் பல உயரங்களை எட்டி சாதனைப் படைக்கஇது உதவும். அத்துடன், இவ்விருது கிடைக்க உழைத்த ஊழியர்கள், பங்குதாரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி'' என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago