பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கைகடிகாரம் வழங்கிய மேயர்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சியின் கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. அண்மையில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த என்.காயத்ரி, எஸ்.தவசியம்மாள், ஏ.மோனிஷா, பி.விஷ்ணு வரதன், எஸ்.விஷாலி, டி.அஸ்வினி, எம்.நஸ்ரின் பேகம், எஸ்.ஸ்ரேயா, ஜி.துர்கா மற்றும் எஸ்.ரிஸ்வானா அன்ஜூம் ஆகியோர் நேற்று ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் பிரியாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது, சிறப்பிடம் பெற்ற 10 மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு நவீன கைக்கடிகாரங்களை பரிசாக வழங்கி மேயர் பாராட்டினார். தொடர்ந்து உயர்க்கல்வி படிப்பிலும் தனிக்கவனம் செலுத்தி, சிறப்பிடம் பெற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கல்வி துணை ஆணையர் ஷரண்யா அரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்