சிவகங்கை: அரசாணையில் பிறப்பு, இறப்பு பதிவு உத்தரவுக்கு காலநிர்ணயம் செய்யப்படாததால், கோட்டாட்சியர்கள் விண்ணப்பதாரர்களை ஆண்டுக்கணக்கில் அலைக்கழித்து வருகின்றனர்.
பிறப்பு, இறப்பை 21 நாட்களுக்குள் ஊரகப் பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலரிடமும், பேரூராட்சி, நகராட்சிகளில் சுகாதார அலுவலரிடமும், மாநகராட்சிகளில் மண்டல அலுவலகங்களில் உள்ள பிறப்பு, இறப்பு பதிவாளரிடமும் பதிவு செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் பிறப்பு, இறப்பை அங்குள்ள சுகாதார ஆய்வாளரிடமும் பதிவு செய்ய வேண்டும்.
21 நாட்களை கடந்துவிட்டால் ஓராண்டு வரை ஊரகப் பகுதிகளுக்கு வட்டாட்சியரிடமும், நகர் பகுதிகளுக்கு அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலர், நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் பதிவு செய்ய வேண்டும். ஓராண்டை கடந்துவிட்டால் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆணை பெற்றே பிறப்பு, இறப்புகளை பதிய வேண்டுமென்ற நடைமுறை இருந்தது.
நீதிமன்றத்தில் வேலைப்பளு, உத்தரவு வழங்குவதில் தாமதம் போன்ற காரணங்களால் உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி, அந்த அதிகாரத்தை கோட்டாட்சியர்களுக்கு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த அரசாணையில் பிறப்பு, இறப்பு பதிவு உத்தரவுக்கு கோட்டாட்சியர்களுக்கு காலநிர்ணயம் செய்யப்படவில்லை. இதனால் பிறப்பு, இறப்பு பதிவு உத்தரவுகளை வழங்காமல் கோட்டாட்சியர்கள் ஆண்டுக்கணக்கில் விண்ணப்பதாரர்களை அலைக்கழித்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு கோட்டாட்சியர் அலுவலகங்களில் பிறப்பு, இறப்பு தொடர்பாக ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் தேங்கியுள்ளன.
» மருத்துவ மாணவி PAYTM கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் திருட்டு: ரிசர்வ் வங்கிக்கு ஐகோர்ட் உத்தரவு
இதுகுறித்து வழக்கறிஞர் சரவணன் கூறியதாவது: ''குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் கூட 6 மாதங்களில் உத்தரவு பெற்று பிறப்பு, இறப்பை பதிவு செய்துவிடலாம். ஆனால் கோட்டாட்சியர் அலுவலகங்களில் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டபோது தான் பிறப்பு, இறப்பு சான்று வழங்க காலநிர்ணயம் இல்லை என்பது தெரியவந்தது. அரசாணையில் உள்ள இந்த குறைபாட்டை பயன்படுத்தி கோட்டாட்சியர்கள் விண்ணப்பதாரர்களை அலைக்கழித்து வருகின்றனர். இதனால் கால நிர்ணயம் செய்து அரசு அரசாணை வெளியிட வேண்டும்.'' இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago