வெளிநாட்டில் பயின்ற மருத்துவ மாணவர்களுக்கு தமிழகத்தில் உள்ளுறை பயிற்சி

By செய்திப்பிரிவு

சென்னை: வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு எப்எம்ஜி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்தி உள்ளுறை பயிற்சி பெற்று வருகின்றனர். இவ்வாறு பயிற்சி பெறும் காலத்தை அங்கீகரிப்பதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் 46 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளிலும், 26 அனுமதிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட உள்ளுறை பயிற்சிக்கான இடங்களை மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் 562 இடங்கள், அனுமதிக்கப்பட்ட கல்லூரிகளில் 3,868 இடங்கள் என மொத்தம் 4,430 இடங்கள் நடப்பாண்டில் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி அல்லாத மருத்துவமனைகளில் நடப்பாண்டில் மட்டும் உள்ளுறை பயிற்சி வழங்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 38 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும், புதுச்சேரியில் 2 மருத்துவமனைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்தகவல் மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE