சென்னை: ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை ரத்து செய்யக்கோரி டெட் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் சென்னையில் தொடர்உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியராக பணிபுரிய ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் 2012-ம் ஆண்டுமுதல் ஆசிரியர் தேர்வுவாரியத்தால் டெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி நியமனத்துக்காக மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று 2019-ம் ஆண்டு பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. இந்த முறையை கைவிடக் கோரிஆசிரியர்கள் பலர் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடுஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம்சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த மே 9-ம்தேதிமுதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 300-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள்பங்கேற்று தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராடிவருகின்றனர். இதுவரை 35 பேர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போராட்டக் குழுவினர் பேசும்போது, ‘‘திமுக தனது தேர்தல் அறிக்கை 177-ல்கூறியபடி தங்களுக்கு பணிவாய்ப்பை வழங்க வேண்டும்.ஆசிரியர் பணிக்கான வயதுஉச்சவரம்பை 57 ஆக உயர்த்தவேண்டும். கடந்த 3 நாட்களாக உடலை வருத்தி போராடி வருகிறோம். ஆனால், இதுவரை அரசுசார்பில் யாரும் எங்களை கண்டுகொள்ளவில்லை. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்’’என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago