மிகச் சிறப்பான அமைச்சராக டிஆர்பி ராஜா செயல்பட வேண்டும்: டிஆர் பாலு

By செய்திப்பிரிவு

சென்னை: மிக சிறப்பான அமைச்சராக டிஆர்பி ராஜா செயல்பட வேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள் என்று டிஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா பதவியேற்றுக் கொண்டார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து திமுக பொருளாளரும், டிஆர்பி ராஜாவின் தந்தையுமான டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் பேசுகையில், "முதல்வரின் எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றி மிக சிறப்பான அமைச்சர் என்ற பெயரை அவர் எடுக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்" என்று தெரிவித்தார்.

டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி அளித்ததில் பூண்டி கலைவாணன் அதிருப்தியில் உள்ளாரா என்ற கேள்விக்கு, "அவர் எங்களின் மாவட்டச் செயலாளர். டிஆர்பி ராஜா அமைச்சராகி இருப்பதற்கு அவரும் ஒரு காரணம். அவர்தான் முக்கிய காரணம்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்