திருச்சி: திருச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 5,000 பேர் அமரும் வகையில் பல்வேறு வசதிகளுடன்கூடிய பிரம்மாண்ட கூட்ட அரங்கம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மையப் பகுதியாக இருப்பதால் திருச்சியில் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டங்கள், அரசு விழாக்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள், அரசின் கண்காட்சிகள் போன்றவை அடிக்கடி நடத்தப்படுகின்றன.
1,000பேர் வரை அமரக்கூடிய நிகழ்ச்சியாக இருந்தால், பெரும்பாலும் கலையரங்கம் திருமண மண்டபத்திலும், அதற்குமேற்பட்டோர் கூடுவதாக இருந்தால், அண்ணா விளையாட்டு மைதானம், தனியார்கல்லூரிகள் உள்ளிட்ட பிற இடங்களில் தற்காலிகமாக கொட்டகை அமைத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கான இடம் தேர்வு செய்வது, ஏற்பாடுகளை மேற்கொள்வது உள்ளிட்டவை அரசு அதிகாரிகளுக்கு பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், இதற்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில், திருச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பகுதியில், நுழைவுவாயிலுக்கு இடதுபுறத்தில் 5,000 பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட கூட்டரங்கம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டார். அதன்படி பொதுப் பணித் துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் ஆய்வு செய்து,அங்கு பல்வேறு நவீன வசதிகளுடன் கூட்டரங்கம் கட்டுவது குறித்து ஆலோசனை நடத்தி வந்தனர்.
மே 14-ம் தேதி அரசு விழா: இதற்கிடையே, மே 14-ம் தேதி பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் திருச்சி மாவட்டத்திலுள்ள 5,000பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். எனவே, அதற்கான விழா பந்தலை தனியார் கல்லூரிகளில் அமைப்பதற்கு பதிலாக, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய கூட்டரங்கத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்திலேயே நடத்த முடிவு செய்யப்பட்டது.
இடம் சீரமைப்பு: இதையடுத்து, அப்பகுதியைச் சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. முன்பகுதியில் இருந்த, பாறையை ‘ட்ரில்லிங்' இயந்திரங்களின் உதவியுடன் உடைத்து, பெயர்த்தெடுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர். இயந்திரங்கள் உதவியுடன் அந்த இடம் சமப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அங்கு நீண்டகாலமாக பராமரிக்கப்பட்டு, நன்கு வளர்ந்திருந்த வேம்பு, புளி, வாகை உள்ளிட்ட மரங்களும் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து ஆட்சியர் மா.பிரதீப்குமாரிடம் கேட்டபோது, ‘திருச்சிமாவட்டத்தில் 5,000 பேர் அமரக்கூடிய வகையிலான கூட்டரங்கம் அவசியம் தேவைப்படுகிறது. எனவே, ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே அதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காகவே தற்போது அந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்காலிக பந்தலில்மே 14-ம் தேதி விழா முடிவடைந்தபின், அங்கு நிரந்தர கூட்டரங்கம் கட்டுவதற்கான நடைமுறைகள் தொடங்கும். பொதுப்பணித் துறையினர் திட்ட அறிக்கை தயாரித்த பிறகே, அதற்கு தேவையான நிதி குறித்த விவரம் தெரியவரும்' என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago