சாதி, வருவாய் சான்றுகளை மாணவர்களுக்கு உடனே வழங்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: வருவாய்த்துறை சான்றிதழ்களை மாணவ, மாணவியருக்கு உடனடியாக வழங்கும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

வருவாய்த்துறை சார்பில், மாணவ, மாணவியருக்கு வருவாய், சாதி, இருப்பிட சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. தற்போது பள்ளி, கல்லூரி சேர்க்கை நடைபெறும் சூழலில் இந்த சான்றிதழ்களை விரைவாக வழங்கும்படி வருவாய்த்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாணவ, மாணவியர் தங்கள்உயர்கல்வியை தொடர ஏதுவாக,வருவாய் துறையின் மூலம் வழங்கப்பட்டு வரும் சாதி, இருப்பிடம், வருவாய் சான்றிதழ்களை முன்னுரிமை கொடுத்து உடனடியாகவழங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இச்சான்றிதழ்கள் அனைத்தும்இணையம் வழியாக விண்ணப்பித்து தேவையான சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளும்படி வருவாய்த்துறை சார்பில் கேட்டுக் கொள்கிறேன். மேலும் சான்றிதழ்களை எவ்வித காலதாமதமும் இன்றி வருவாய் வட்டாட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள் உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE