சென்னை: ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆட்டோ ஓட்டுநர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதன் ஒரு பகுதியாக, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடந்த உண்ணாவிரத போராட்டத்தை சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் கூறியதாவது: மீட்டர் கட்டணத்தை உயர்த்துவதோடு, மக்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து அதை கண்காணிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கடந்த 2022 பிப்ரவரியில் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, மே மாதம் நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில், 1.5 கி.மீ. தொலைவுக்கு ரூ.25 மற்றும் அடுத்தடுத்த ஒவ்வொரு கி.மீ. தொலைவுக்கும் ரூ.20 கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தெரிவித்தோம். ஆனால், இதுவரை கட்டணம் உயர்த்தப்படவில்லை. நீதிமன்றம் கூறியவாறு, அரசு, நுகர்வோர், ஆட்டோ சங்கத்தினர் அடங்கிய முத்தரப்பு குழுவையும் அரசு அமைக்கவில்லை.
» பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது: கலவரத்தைக் கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு
» ஐன்ஸ்டீனைவிட அறிவுத்திறன் அதிகம் - ஆட்டிசம் பாதித்த சிறுமி முதுநிலை பட்டம் பெற்று சாதனை
கடந்த 10 ஆண்டுகளில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும். வாடகை வாகனங்களை முன்பதிவு செய்யும் செயலியை அரசு தொடங்கி நடத்த வேண்டும். இதன்மூலம் அரசுக்கு வருவாய் வரும். மக்கள் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய இயலும். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தொழில் உத்தரவாதமும் கிடைக்கும்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் உணவு, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை இருசக்கர வாகனங்களில் விநியோகம் செய்பவர்கள் அதிகம் விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக, பைக் டாக்ஸியில் செல்வோர் விபத்துக்கு உள்ளாவதும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. அந்த வாகனத்துக்கு, பொது போக்குவரத்துக்கான அனுமதி கிடையாது. இதனால், பயணிப்போருக்கு சட்ட பாதுகாப்பு வழங்க முடியாது. எனினும், தற்போது வரை பைக் டாக்ஸி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதை முறைப்படுத்த வேண்டும்.
புதிய மோட்டார் வாகன சட்டத்தின்கீழ்தான் பைக் டாக்ஸிகள் இயங்குகின்றன. நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்துக்கு எதிராக வாக்களித்த திமுக, தமிழகத்தில் இதை அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, ஆட்டோ வாங்குவோருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டத்தில், சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர் வி.குமார், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் எம்.சிவாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago