துறை ரீதியான நடவடிக்கைக்கு தடை கோரி ஐபிஎஸ் அதிகாரி தொடர்ந்த வழக்கு: டிஜிபி, சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: திருமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணுடன் பழகி, கொலை மிரட்டல் விடுத்த புகாரில், தன் மீதான துறை ரீதியான நடவடிக்கைக்கு தடை கோரி ஐபிஎஸ் அதிகாரி செல்வநாகரத்தினம் தாக்கல் செய்த வழக்கில், டிஜிபி, சிபிசிஐடி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு காவலர் பயிற்சி மையத்தின் துணை இயக்குநராக உள்ள ஐபிஎஸ் அதிகாரி பி. செல்வ நாகரத்தினம், கடந்த 2019ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் தன்னுடன் பழகி, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி உடல் ரீதியாக உறவில் இருந்தார். பின்னர், பேசுவதை நிறுத்திக் கொண்டார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார், என்று சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் செல்வநாகரத்தினம் மீது கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மின்னஞ்சல் மூலம் டிஜிபிக்கு புகார் அளித்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார், செல்வநாகரத்தினம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கை தாக்கல் செய்தது. இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் டிஜிபி சார்பில் செல்வ நாகரத்தினத்திற்கு மெமோ அனுப்பப்பட்டு, 30 நாட்களில் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து செல்வ நாகரத்தினம் சார்பில் சென்னையில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தம் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்கள் தமக்கு வழங்கப்படவில்லை என்று கூறியிருந்தார். மேலும், தம் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் கோரியிருந்தார். இந்த கோரிக்கையை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் நிராகரித்தது.

இதனை எதிர்த்து செல்வநாகரத்தினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், "நான் திருமணமானவர் என்று தெரிந்தே, அந்த பெண் தன்னுடன் பழகினார். அந்த பெண்ணை நான் ஏமாற்றவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் நியாயமான முறையில் விசாரிக்கவில்லை" என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜெகதீஷ்சந்திரா, சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து காவல்துறை டிஜிபி, சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்