சென்னை: பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா தடை தொடர்பாக தமிழகத்தில் 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து கடந்த செப்டம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மட்டுமின்றி, அதன் துணை அமைப்புகள் மற்றும் அதற்கு உதவும் அமைப்புகளுக்கும் மத்திய அரசு தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தொடர்பு உடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் தொடர் உடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் திருவொற்றியூர் , மண்ணடி, ஓட்டேரி உள்ளிட்ட இடங்களிலும், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி போன்ற மாவட்டங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago