நலிந்த தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் குடும்ப நல நிதி - பழனிசாமி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: மே தினத்தையொட்டி அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 314 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் குடும்ப நல நிதி வரும் 17-ம் தேதி வழங்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மே தினத்தை முன்னிட்டு, அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி வழங்கும் திட்டத்தை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

அந்த வகையில், தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற் சங்கங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 314 நலிந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம், மொத்தம் ரூ.3 கோடியே 14 லட்சம் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும்.

அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த, நிதியுதவி பெறும் நலிந்த தொழிலாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கான நிதியுதவி வரும் 17-ம் தேதி, சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வழங்கப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE