திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உயிரிழந்த முதியவரின் உடல், செஞ்சிலுவை சங்கம் சார்பில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
திருவண்ணாமலை செட்டித் தெருவில் வசித்தவர் ஒப்பந்ததாரர் இரா.திருவேங்கடம்(94). இவர், தனது உடலை மருத்துவமனைக்கு தானமாக வழங்க விரும்புவதாக செஞ்சிலுவை சங்கத்துக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக உறுதிமொழி அளித்துள்ளார்.
இந்நிலையில், வயது மூப்பு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார். இவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டது. பின்னர், செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்டத் தலைவர் இந்திரராஜன் முன்னிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் அவரது உடலை, மகன்கள் ராஜேந்திரன், இளங்கோவன், செல்வம், கண்ணன் ஆகியோர் ஒப்படைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago