சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகள் 86.86 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் உள்ள 32 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 2626 மாணவர்கள் மற்றும் 3273 மாணவியர் என மொத்தம் 5,899 மாணவ, மாணவியர் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினார். இதில் 2129 மாணவர்கள் (81.07%) மற்றும் 2995 (91.50%) மாணவியர் என மொத்தம் 5,124 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 86.86% ஆகும். கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் 86.47% ஆகும்.
வேதியியல் பாடப் பிரிவில் 1, தாவரவியல் பாடப்பிரிவில் 1, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடப்பிரிவில் 2, வரலாறு பாடப்பிரிவில் 1, புவியியல் பாடப்பிரிவில் 2, பொருளியல் பாடப்பிரிவில் 7, வணிகவியல் பாடப்பிரிவில் 20, கணக்கு பதிவியல் பாடப்பிரிவில் 25, கணினி அறிவியல் பாடப்பிரிவில் 3 மற்றும் கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவில் 9 என்று மொத்தம் 71 மாணவ, மாணவியர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 42 மாணவ, மாணவியர் பல்வேறு பாடப்பிரிவில் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
52 மாணவ, மாணவியர்கள் 551முதல் 600 வரையிலான மதிப்பெண்களும், 254 மாணவ, மாணவியர்கள் 501லிருந்து 550 வரையிலான மதிப்பெண்களும், 456 மாணவ, மாணவியர்கள் 451லிருந்து 500 வரையிலான மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
எம்.எச். சாலை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 592 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மார்க்கெட் தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 589 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 587 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும், மடுவின்கரை சென்னை மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 583 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடத்தையும், மார்க்கெட் தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 582 மதிப்பெண்கள் பெற்று ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.
தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில், புலியூர் சென்னை மேல்நிலைப்பள்ளி 100 சதவீதத்துடன் முதலிடத்தையும், சுப்பராயன் சென்னை மேல்நிலைப் பள்ளி 98.29 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், நெசப்பாக்கம் சென்னை மேல்நிலைப்பள்ளி 97.89 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும், புல்லா அவென்யூ சென்னை மேல்நிலைப்பள்ளி 97.44 சதவீதத்துடன் நான்காம் இடத்தையும், திருவான்மியூர் சென்னை மேல்நிலைப்பள்ளி 95.55 சதவீதத்துடன் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago