பிளஸ் 2 தேர்வு முடிவுகள் | பாடவாரியாக தேர்ச்சி விகிதம்; கணினி அறிவியலில் உச்சம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், கணினி அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 99.29 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 7,55,451. தேர்ச்சி சதவீதம் 94.03%.

மாணவியர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 4,05,753. தேர்ச்சி சதவீதம் 96.38. மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 3,49,697. தேர்ச்சி சதவீதம் 91.45.

மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாடவாரியான தேர்ச்சி விகிதத்தில் கணினி அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 99.29 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அறிவியல் பாட பிரிவுகளில் 96.32 சதவீத பேரும், வணிகவியல் பாடப்பிரிவுகளில் 91.63 சதவீத பேரும், கலைப் பிரிவுகளில் 81.89 சதவீத பேரும், தொழிற்பாடப் பிரிவுகளில் 82.11 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இது தவிர்த்து, இயற்பியல் பாடத்தில் 97.76 சதவீத பேரும், வேதியியல் பாடத்தில் 98.31 சதவீத பேரும், உயிரியல் பாடத்தில் 98.47 சதவீத பேரும், கணிதப் பாடத்தில் 98.88 சதவீ பேரும், தாவரவியல் பாடத்தில் 98.04 சதவீத பேரும், விலங்கியல் பாடத்தில் 97.77 சதவீத பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 99.29 சதவீத பேரும், வணிகவியல் பாடத்தில் 96.41 சதவீத பேரும், கணக்குபதிவியல் பாடத்தில் 96.06 சதவீத பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்