பிளஸ் 2 தேர்வு முடிவுகள் | அரசுப் பள்ளிகளில் 89.80% தேர்ச்சி: 326 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை: 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகள் 89.80 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 326 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 7,55,451. தேர்ச்சி சதவீதம் 94.03%.

மாணவியர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 4,05,753. தேர்ச்சி சதவீதம் 96.38. மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 3,49,697. தேர்ச்சி சதவீதம் 91.45.

மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 7533 பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 89.80 சதவீதம். அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.99 சதவீதம், தனியார் பள்ளிகள் 99.08 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

இதைத்தவிர்த்து இரு பாலர் பயின்ற பள்ளிகள் 94.39 சதவீதமும், ஆண்கள் பள்ளிகளில் 87.79 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 96.04 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும் 2767 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 326.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்