வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு சம்பவம் : ரயில்வே எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சனிக்கிழமை மாலை காட்பாடி-அரக்கோணம் இடையே மகேந்திரவாடி-அன்வர்திகான் பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது, அடையாளம் தெரியாத சிலர், ரயில் பெட்டி மீது கல் வீசினர். இதில் சி6 பெட்டியில் 75, 76 இருக்கைகளுக்கு அருகில் இருந்த கண்ணாடி சேதமடைந்தது. பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதுபோல, மைசூர்-சென்னைக்கு நேற்று வந்த வந்தேபாரத் ரயிலில் எக்ஸிகியூட் வகுப்புபெட்டியில் ஒரு பகுதியில் பெரியகண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுஇருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மர்மநபர்கள் கல்வீசி சேதப்படுத்தி இருப்பார்கள் என்றுபயணிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவங்கள் குறித்து ஆர்பிஎஃப் போலீஸார் வழக்குப்பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையில், ரயில்மீது கல்வீசி சேதப்படும் நபர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “ரயில் மீது கற்களை வீசுவது என்பது ரயில்வே சட்டத்தில் 153 மற்றும் 154 பிரிவுகளின்கீழ் குற்றமாகும். இது போன்ற கல்வீச்சு சம்பவங்கள் நடந்தால், கட்டணமில்லா உதவி எண் 139-க்கு தகவல் தெரிவிக்கலாம்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 min ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்