திருவள்ளூர்: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர், பூண்டி ஏரியை வந்தடைந்தது. இதன் மூலம், சென்னையில் குடிநீர் தேவைக்காக 2 டிஎம்சி தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே செய்யப்பட்ட கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர அரசு ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 12 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும்.
ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும் தண்ணீர் பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும். கடந்த ஜனவரி மாதம் பூண்டி ஏரியில் போதுமான தண்ணீர் இருப்பு இருந்ததால் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் பெறப்படவில்லை.
இந்நிலையில், தற்போது சுட்டெரித்து வரும் கோடை வெயில்காரணமாக ஏரிகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே, கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி, கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அரசு, ஆந்திர அரசிடம் கேட்டுக் கொண்டது. அதன்பேரில், இம்மாதம் 1-ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரிகளில் கிருஷ்ணா நீர் சேமித்து வைக்கப்பட்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த 5 ஏரிகளின் மொத்தகொள்ளளவு 11.507 டிஎம்சி ஆகும். இதில் பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். 3.231 டிஎம்சி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
கண்டலேறு அணையில் இருந்ததிறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர்விநாடிக்கு 2,200 கன அடி வீதம்152 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கடந்த 3-ம் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது. விநாடிக்கு 20 கன அடி வீதம் வந்து கொண்டு இருந்தது. கிருஷ்ணா நதி கால்வாய் தமிழகத்தில் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாய்கிறது.
கரைகள் சீரமைப்பு பணி: ஜீரோ பாயிண்டில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் கரைகள் சேதம்அடைந்துள்ளதால், கரைகள் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீரை பூண்டி ஏரிக்கு அனுப்பாமல், ஊத்துக்கோட்டை அருகே ஜங்காளபள்ளியில் உள்ள மதகுகள் வழியாக கண்ணன் கோட்டை நீர்த்தேக்கத்துக்கு திருப்பி விடப்பட்டது.
இதனால், கண்ணன்கோட்டை நீர் தேக்கத்தில் நீர்மட்டம் உயர்ந்து நேற்று முன்தினம் முழு கொள்ளளவான 500 மில்லியன் கன அடியை எட்டியது. இதன் காரணமாக கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இதையடுத்து, ஜீரோ பாயிண்ட்டில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம்காலை சென்னை பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில், 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.
நேற்று முன்தினம் காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 26.07 அடியாக பதிவாகியது. 999 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் விநாடிக்கு 200 கன அடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது. பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு விநாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக விநாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கிருஷ்ணா நீர் சென்னையில் குடிநீர் தேவைக்காக 2 டிஎம்சி தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago