அரக்கோணம்: சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பக்தர்களுக்காக ரூ.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அடிப்படை கட்டமைப்பு பணிளை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பிரசித்திப்பெற்ற லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் மலையடிவாரத்தில் கம்பிவட ஊர்தி அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இங்கு வரும் பக்தர்கள் வசதிக்காக 7 நன் கொடையாளர்கள் மூலமாக ரூ.11 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் அமரும் அறை, கழிப்பறை, வாகனம் நிறுத்துமிடம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இதில், 70 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் கிரானைட், டைல்ஸ் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மின்சார வசதி, தண்ணீர் குழாய்கள், வர்ணம் பூசுதல் போன்ற பணிகளும் தற் போது நடைபெற்று வருகின்றன.
மேலும், மலை உச்சியில் பக்தர் கள் கம்பி வட ஊர்தியில் இருந்து இறங்கி மூலஸ்தானத்துக்கு செல்வதற்கு வசதியாக அங்கு லிப்ட் வசதியுடன் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள், அமைச்சர் மற்றும் எம்.பி.,யிடம் தெரிவித்தனர்.
பணிகளை விரைந்தும், மிகவும் கவனமாகவும் முடிக்க வேண்டும். ஏதேனும் பிரச்சினை இருந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு அதிகாரிகளிடம் அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார். இதில், கோயில் நிர்வாக பணி யாளர்கள் உட்பட பலர் பங் கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago