பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக டிக்கெட் விற்பனை: சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: 5 போட்டிகளுக்கு பிறகு பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக டிக்கெட் விற்பனை செய்யப்படும் சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளுக்கு அதிக டிமாண்ட் இருந்து வருகிறது. சேப்பாக்கம் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் வழங்கப்படுகிறது. ( IPL 2023 | சேப்பாக்கம் போட்டிகளுக்கான டிக்கெட் தட்டுப்பாடு - காரணம் தோனி மட்டும்தானா? )

ஒவ்வொரு போட்டிக்கும் நேரடியாக டிக்கெட் விற்பனை செய்யப்படும்போது சேப்பாக்கம் மைதானத்தை ஒட்டியுள்ள பகுதியில் அதிக அளவு மக்கள் கூடுகின்றனர். ‘எப்படியாவது டிக்கெட் வாங்கி விட வேண்டும்’ என்ற எண்ணத்தோடு மணிக்கணக்கில் காத்திருக்கும் ரசிகர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. அதோடு போலீஸாரின் தடியடியும் அவர்களுக்கு பிரிசாக கிடைக்கிறது.

குறிப்பாக, கடந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனையின் போது, மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு டிக்கெட் கவுன்ட்டரில் தனி வரிசை வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், வரும் 10ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை நாளை நடைபெறுகிறது. இதில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

டிக்கெட் விலை விவரம்..

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்