மதுரை: ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜோசப் அமல்ராஜ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். இதனால் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு முழு தகுதி பெற்றுள்ளேன்.
இந்நிலையில் டிஇடி தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதற்காக மாநில அளவிலான பொது கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் என்னைப் போன்றவர்களின் பதவி உயர்வு வாய்ப்பு பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது. எனக்கு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இம்மனுவை விசாரித்து நீதிபதி எம்.தண்டபாணி பிறப்பித்த உத்தரவு: தகுதியானவர்களை கொண்டு பதவி உயர்வுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். டிஇடி தேர்ச்சி பெறாதவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கும் தகுதி குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும். மனுதாரர் கோரிக்கை குறித்து 2 வாரங்களில் கல்வி துறை உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை கலந்தாய்வு நடத்தக் கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago