ஆலந்தூர் - வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் விமானநிலையம்-விம்கோநகர் மற்றும் பரங்கிமலை-சென்ட்ரல் என இரு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறன.

இவற்றில் தினமும் 2.50 லட்சம் பேர் வரை பயணம் செய்கின்றனர். குறிப்பாக, காலை, மாலை வேளைகளில் ஏராளமானோர் பயணிக்கின்றனர். இதனால், மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.

ஆலந்தூர் - வண்ணாரப் பேட்டை வழித் தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் நெரிசலைத் தவிர்க்க, கூடுதல் ரயில்களை இயக்க வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்று, இந்த வழித்தடத்தில் உள்ள நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்நிலையில், ஆலந்துார் – வண்ணாரப் பேட்டை இடையே மெட்ரோ ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில்நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் ஆலந்துார் – வண்ணாரப்பேட்டை தடத்தில் கடந்த 1-ம் தேதி முதல் 20 ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நேரங்களில் 3 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கும் வகையில், ரயில் சேவை சீரமைக்கப்பட்டுள்ளது.

தேவை ஏற்பட்டால், சென்ட்ரல் – விமான நிலைய தடத்திலும் மெட்ரோ ரயில்களின் சேவையை அதிகரிக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 secs ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்