பூந்தமல்லி - போரூர் உயர்மட்ட வழித்தடத்தில் பாதை அமைக்கும் பணி ஜூலையில் தொடங்கும்

By செய்திப்பிரிவு

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித் தடத்தில், பூந்தமல்லி - போரூர் உயர்மட்ட வழித் தடத்தில் பாதை அமைக்கும் பணியை ஜூலையில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவில் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடம் (45.8 கி.மீ.), கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை 4-வது வழித் தடம் (26.1 கி.மீ.), மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித் தடம் (47 கி.மீ.) ஆகும்.

இந்த 3 வழித் தடங்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரையிலான 4-வது வழித் தடத்தில் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏனெனில், இந்த வழித்தடம் முன்னுரிமை அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பூந்தமல்லி முதல் பவுர்ஹவுஸ் வரை 16.1 கி.மீ. தொலைவுக்கு உயர்மட்டப் பாதையாகவும், கோடம்பாக்கம் மேம்பாலம் - கலங்கரை விளக்கம் வரை 10 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதையாகவும் அமைக்கப்பட உள்ளது. இவற்றில் உயர்மட்டப் பாதை பணி வேகமாக நடைபெற்று வருகின்றன.

பூந்தமல்லி முதல் போரூர் வரை பல இடங்களில் தூண்கள் அமைத்து அதற்கு மேல் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழித் தடத்தில் பூந்தமல்லி - போரூர் வரை பாதை அமைக்கும் பணியை ஜூலையில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஓராண்டுக்குள் முடிக்க திட்டம்: 2025-ம் ஆண்டு இறுதிக்குள் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை ரயில் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளதால், கட்டுமானப் பணியை மேம்படுத்தி, தண்டவாளப் பணியை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஜூலையில் பாதை அமைக்கும் பணி தொடங்கி, ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வோர் நாளும், ஒப்பந்ததாரர் சுமார் 80 மீட்டர் பாதையை அமைக்க முடியும். ஜூன் மாத இறுதிக்குள் தயாரிப்பு பணிகள் மற்றும் பொருட்கள் தளத்தில் ஏற்றப்படும்.

இந்த வழித்தடப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வந்தாலும், சிலதடைகளால், இந்த பாதையில் இரண்டு ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி தாமதமாகும் நிலை முன்பு இருந்தது. ஒப்பந்ததாரர் இரண்டு நிலையங்களை சரியான நேரத்தில் முடிப்பதில் சில சிக்கல்கள் மற்றும் சிரமங்களைக் குறிப்பிட்டனர்.

இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி, தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த தடத்தில் வரும் 2025-ம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து நிலையங்களையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 secs ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்