திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறைக்கு தேசிய அளவில் 7, மாநில அளவில் 2-வது இடம்

By செய்திப்பிரிவு

பழநி: உணவுப் பாதுகாப்புக்கான செயல்பாடுகளில், தேசிய அளவில் திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு 7-வது இடமும், மாநில அளவில் 2-வது இடமும் கிடைத்துள்ளது.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், நாடு முழுவதும் மாநில மற்றும் மாவட்ட அளவில் உணவுப் பாதுகாப்புத் துறைகளின் ‘ஈட் ரைட் சேலஞ்ச்’ செயல்பாடுகளை மதிப்பீடு செய்து, ஆண்டுதோறும் விருது வழங்குவது வழக்கம்.

இந்நிலையில், 2022-23-ம் ஆண்டுக்கான உணவுப் பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகளை, உணவுப் பாதுகாப்பு குறியீடு மூலம் இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் மதிப்பீடு செய்தது. இதற்காக, ‘ஈட் ரைட் சேலஞ்ச்’ என்ற போட்டியில் நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பங்கேற்றன.

இதில், உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குதல், சாலையோர தள்ளு வண்டி கடைகளுக்கு ‘கிளீன் ஸ்ட்ரீட் ஃபுட்’ சான்றிதழ் வழங்குதல், கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம், அன்னதானத்தை பரிசோதித்து தரச் சான்றிதழ் வழங்குதல், அபராதம் விதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு போட்டி நடத்தப்பட்டது.

அதில், 177 மதிப்பெண்கள் பெற்று, தேசிய அளவில் திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை 7-ம் இடமும், மாநில அளவில் 2-வது இடமும் பிடித்துள்ளது. இப்போட்டியில், 200-க்கு 196 மதிப்பெண்கள் பெற்று தேசிய மற்றும் மாநில அளவில் கோவை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

தொடர்ந்து, 175 மதிப்பெண்களுடன் தேசிய அளவில் மதுரை மாவட்டம் 8-வது இடமும், மாநில அளவில் 3-வது இடமும் பிடித்துள்ளது. டெல்லியில் இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் சார்பில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்