திருநெல்வேலி - செங்கோட்டை ரயில்களின் வேகம் அதிகரிப்பு: கால அட்டவணையில் மாற்றம்

By செய்திப்பிரிவு

தென்காசி: திருநெல்வேலி - செங்கோட்டை இடையே ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் அவற்றின் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வண்டி எண் 16791 திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி விரைவு ரயில் திருநெல்வேலியில் இருந்து வழக்கமான நேரமான இரவு 11.20-க்கு பதிலாக 11.30-க்கு புறப்பட்டு சேரன்மகாதேவி 11.45, அம்பாசமுத்திரம் 11.56, கடையம் 12.05, தென்காசிக்கு வழக்கமான நேரமான 12.35-க்கு செல்லும்.

எண் 16792 பாலக்காடு - திருநெல்வேலி விரைவு ரயில் செங்கோட்டைக்கு வழக்கமான நேரமான அதிகாலை 3 மணிக்கு பதிலாக 2.45-க்கு வந்து புறப்பட்டு, தென்காசி 2.57, பாவூர்சத்திரம் 3.06, அம்பாசமுத்திரம் 3.26, சேரன்மகாதேவி 3.39-க்கு வந்து திருநெல்வேலியை 10 நிமிடங்களுக்கு முன்பாக 4.40 மணிக்கு சென்றடையும்.

காலை 7 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் எண் 06685 ரயில் செங் கோட்டையை 10 நிமிடங்களுக்கு முன்பாக 9.05 க்கு சென்றடையும். திருநெல்வேலியில் காலை 9.10-க்கு புறப்பட வேண்டிய எண் 06681 செங்கோட்டை ரயில் 9.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 11:50 க்கு செங்கோட்டையை சென்றடையும்.

மதியம் 1.50-க்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் எண் 06687 ரயில் 5 நிமிடங்களுக்கு முன்பாக 4.10 க்கு செங்கோட்டை சென்றடையும். மாலை 6.15-க்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் எண் 06657 ரயில் செங்கோட்டைக்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக இரவு 8.20-க்கு சென்றடையும்.

காலை 6.40-க்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் எண் 06682 ரயில் திருநெல்வேலி டவுன் வரை வேகம் அதிகரிக்கப்பட்டு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தை 8.50-க்கு சென்றடையும். காலை 10.05-க்கு செங்கோட்டையில் புறப்படும் எண் 06684 ரயில் திருநெல்வேலிக்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக பகல் 12.15-க்கு சென்றடையும்.

மதியம் 2.55-க்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் எண் 06658 ரயில் திருநெல்வேலிக்கு 20 நிமிடங்களுக்கு முன்பாக மாலை 5 மணிக்கு சென்றடையும். மாலை 5.50-க்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் எண் 06686 ரயில் திருநெல்வேலிக்கு 5 நிமிடங்களுக்கு முன்பாக இரவு 8.05 மணிக்கு சென்றடையும்.

மதியம் 11.50-க்கு செங்கோட்டையில் புறப்படும் எண் 06664 செங்கோட்டை - மதுரை ரயில் 11.50-க்கு பதிலாக 12.10-க்கு புறப்பட்டு 15 நிமிடங்கள் வேகம் அதிகரிக்கப்பட்டு மாலை 3.40-க்கு மதுரையை சென்றடையும். மதியம் 11.35-க்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் எண் 06659 கொல்லம் ரயில் 11.35-க்கு பதிலாக 12.35-க்கு புறப்பட்டு 15 நிமிடங்கள் வேகம் அதிகரிக்கப்பட்டு மாலை 4.35 க்கு கொல்லம் சென்றடையும். இந்த கால அட்டவணை மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்