சிவகங்கை: கடந்த 1964-ம் ஆண்டு நகராட்சியாக சிவகங்கை தரம் உயர்த்தப்பட்டது. 1985-ல் மாவட்டத் தலைநகராக சிவகங்கை அறிவிக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு முதல்நிலை நகராட்சியானது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கை நகராட்சியில் வரி வருவாயை அதிகரிக்க, நகரின் விரிவாக்கப் பகுதிகளை இணைக்குமாறு நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டார். அதன்படி, சிவகங்கையுடன் காஞ்சிரங்கால், வாணியங்குடி ஊராட்சிகள் முழுவதும், கொட்டக்குடி கீழ்பாத்தி ஊராட்சியில் கொட்டக்குடி,
சூரக்குளம் - புதுக்கோட்டை ஊராட்சியில் ராகிணிப்பட்டி, பையூர், இடையமேலூர் ஊராட்சியில் காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து 33 வார்டுகளாக உயர்த்தி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் விரிவாக்கப் பகுதிகளை இணைத்து சிவகங்கையை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்த 2014-ல் அப்போதைய நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அது தொடர்பாக நடவடிக்கை இல்லாத நிலையில், கடந்த மாதம், சிவகங்கையை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என நகராட்சித் தலைவர் சி.எம்.துரை ஆனந்த் தலைமையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அண்மையில், தமிழகத்தில் உள்ள 14 நகராட்சிகளை தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டது.
ஆனால் சிவகங்கை நகராட்சி தரம் உயர்த்தப்படவில்லை. நகராட்சியில் தரம் உயர்த்த 2 முறை தீர்மானம் நிறைவேற்றியும் பயனில்லை. இது குறித்து நகராட்சி அதிகாரி களிடம் கேட்டபோது, ‘கடந்த காலங்களில் தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்த, வரி வருவாய் ரூ.6 கோடியாக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது அதை ரூ.9 கோடியாக உயர்த்திவிட்டனர். நகராட்சியின் வருவாய் ரூ.8.10 கோடியாக உள்ளது’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago