தஞ்சாவூர்: ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி விழாவையொட்டி, தஞ்சாவூர் அருகேயுள்ள மெலட்டூர் மற்றும் சாலியமங்கலத்தில் பாகவத மேளா நாட்டிய நாடகம் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்றது.
தஞ்சாவூர் அருகே மெலட்டூரில் சுமார் 450 ஆண்டுகளுக்கு முன் ஏராளமான இசைக்கலைஞர்கள் வாழ்ந்தனர். தமிழை தாய்மொழியாக கொண்ட இவர்கள் தெலுங்கு மொழி பாடல்களுக்கு, இதிகாச நாயகன், நாயகி போன்று மேடையில் தோன்றி நடிக்கும் நாடகம் பாகவத மேளா எனப்படும். மெலட்டூர் மற்றும் சாலியமங்கலம் பகுதிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் நரசிம்ம ஜெயந்தி விழாவில் இந்த பாகவத மேளா நாடகம் அரங்கேறும்.
மெலட்டூர், சாலியமங்கலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் என எங்கு வசித்தாலும், அவர்கள் இந்த விழா நாட்களில் சொந்த ஊருக்கு வந்து பங்கேற்பது வழக்கம்.
அதன்படி மெலட்டூரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அருகேயுள்ள ஸ்ரீ நல்லி கலையரங்கத்தில் மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக அறக்கட்டளை, மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய வித்யா சங்கம் ஆகியவை சார்பில் பாகவத மேளா நாட்டிய நாடகம் நேற்று முன்தினம் மாலை தொடங்கியது.
» தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி - தமிழகத்தில் 4 நாட்கள் மழை வாய்ப்பு
» மே 23 முதல் ஜூன் 2 வரை முதல்வர் ஸ்டாலின் 4 நாடுகளுக்கு பயணம்
மாலை 6 மணிக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் அபிஷேகம், இரவு 7 மணிக்கு வீதியுலா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு பாரம்பரிய முறைப்படி எண்ணெய் விளக்கு ஒளியில் தொடங்கிய பிரகலாத சரித்திரம் என்கிற பாகவத மேளா நாட்டிய நாடகம் விடிய விடிய நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று இரவு 8 மணிக்கு ருக்மணி கல்யாணம், ஆஞ்சநேய உற்சவத்துடன் பாகவத மேளா நிறைவு பெற்றது.
இதேபோல, சாலியமங்கலத்தில் தஞ்சாவூரை ஆண்ட அச்சுதப்ப நாயக்கர் காலமான 1645-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 378 ஆண்டுகளாக ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி விழாவையொட்டி பாகவத மேளா நாட்டிய நாடகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பாகவத மேளா பக்த சமாஜம் சார்பில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு மங்கல இசை, 6 மணிக்கு ஆராதனை, இரவு 7 மணிக்கு ஸ்ரீனிவாச பெருமாள் கருட சேவையில் எழுந்தருளல் ஆகியவை நடைபெற்றது.
பின்னர், இரவு 10 மணிக்கு ஸ்ரீ பிரகலாத சரித்திரம் பாகவத மேளா நாட்டிய நாடகம் தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று மாலை சமாஜத்தின் ஆண்டுப் பொதுக் குழுக் கூட்டம், சிறுமிகளின் கர்னாடக இசை நிகழ்ச்சி, இரவு ருக்மணி பரிணயம் பாகவத மேளா நாட்டிய நாடகம் ஆகியவை நடைபெற்றது.
இன்று (மே 6) காலை 7 மணிக்கு ருக்மணி கல்யாணம், இரவு 7 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேய உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
2 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago