தளவாய் சுந்தரம் ஸ்லீப்பர்செல்லா?- தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

By மு.அப்துல் முத்தலீஃப்

தளவாய் சுந்தரம் திடீரென பொதுக்குழுவில் கலந்துகொண்டது பற்றி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி அளித்தார். அப்போது அவர், பொதுக்குழு கூட்டத்துக்குள் ஸ்லீப்பர் செல் நிறைய பேர் உள்ளே சென்றுள்ளார்கள். அவர்கள் திரும்பி வந்த பிறகுதான்  என்ன நடந்தது என்பதை சொல்ல முடியும் என்றார்.

அதிமுக பொதுக்குழுவில் தளவாய் சுந்தரம் கலந்துகொள்வது பற்றி தங்க தமிழ்ச் செல்வனிடம் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது;

தளவாய் சுந்தரம் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளாரே?

தெரியவில்லை.. அதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.

உங்கள் அணியின் ஸ்லீப்பர் செல்லாக பொதுக்குழு கூட்டத்தில் அவர் கலந்துகொண்டுள்ளாரா?

ஸ்லீப்பர் செல் நிறைய பேர் உள்ளே சென்றுள்ளார்கள். அவர்கள் திரும்பி வந்த பிறகுதான்  என்ன நடந்தது என்பதைச் சொல்ல முடியும்.

பொதுக்குழு குறித்து உயர் நீதிமன்ற அறிவிப்பு பற்றி?

இவர்கள் கூட்டும் பொதுக்குழு கூட்டம் செல்லாது. அதைத்தான் நீதிமன்றம் சொல்கிறது. இவர்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது. எல்லாமே நீதிமன்ற முடிவுக்கு உட்பட்டது. என்ன தீர்மானம் போட்டாலும் எங்களைக் கட்டுப்படுத்தாது. துணை பொதுச் செயலாளர்தான் சட்டப்படி எங்களைக் கட்டுப்படுத்துவார். அவர்தான் அதிகாரம் உள்ளவர்.

தினகரன் ஆட்சிக் கலைப்பு குறித்து கூறியுள்ளாரே?

ஆம். அவர் சொல்லியிருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.

அது மாதிரி ஆட்சியைக் கவிழ்த்தால் ஜெயலலிதா ஆட்சியை கவிழ்த்தவர்கள் என்ற அவப்பெயர் உண்டாகுமே?

அவப்பெயர் ஏதும் வராது.

தளவாய் சுந்தரம் தகவல் சொல்லிவிட்டுதான் சென்றாரா?

தெரியவில்லை, எங்களிடம் போவது பற்றி எந்தத் தகவலும் சொல்லவில்லை.

பொதுக்குழு கூட்டத்தில் எவ்வளவு பேர் கலந்துகொண்டார்கள்?

எங்களுக்கு கிடைத்த தகவல் மிகவும் குறைந்த அளவினரே கலந்துகொண்டுள்ளதாக தெரிய வருகிறது. வலுக்கட்டாயமாக கூட்டிச் சென்றுள்ளனர். பொதுக்குழு உறுப்பினர்கள் அதிகம் பேர் கலந்துகொள்ளவில்லை. பொதுக்குழு உறுப்பினர்கள் இல்லாதவர்களை தபால் மூலம் கடிதம் அனுப்பி அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்படியானால் இது போலி பொதுக்குழு கூட்டம் என்று சொல்கிறீர்களா?

ஆமாம் இது கண் துடைப்புதானே. அவர்களுக்கே தெரியும் இந்த பொதுக்குழுவை கூட்ட முடியாது, கூட்டினாலும் செல்லாது, எங்களை கட்டுப்படுத்தாது என்பது.

தொண்டர்களிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த கூட்டப்பட்ட கூட்டமே தவிர வேறு எந்த மாற்றத்தையும் இக்கூட்டம் ஏற்படுத்தாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்