“பித்தம் தெளிய சித்த மருத்துவத்தில் மருந்துண்டு ஆளுநரே! - சு.வெங்கடேசன் எம்.பி

By செய்திப்பிரிவு

சென்னை: பித்தம் தெளிய சித்த மருத்துவத்தில் மருந்து உள்ளது என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சு.வெங்கடேசன் எம்.பி பதில் அளித்துள்ளார்.

‘திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி. திராவிட மாடல் என்பது நமது ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது’ என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருந்தார். மேலும், தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மசோதா பல்கலைக்கழக மானிய குழு விதிகளுக்கு எதிராக உள்ளதால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், "உத்தரப் பிரதேசத்தில் இரு பல்கலைக்கழகங்களுக்கு அம்மாநில முதல்வர் வேந்தராக உள்ளார். தமிழகத்தின் முதல்வர் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராகலாம் என்பது “விதிகளுக்கு முரணானது” என்கிறார் ஆளுநர். பித்தம் தெளிய சித்த மருத்துவத்தில் மருந்துண்டு ஆளுநரே!" இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE