இபிஎஸ்ஸுக்கு அங்கீகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இபிஎஸ்-ஐ அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம், அதிமுக பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் பி. ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி.சுரேன் பழனிசாமி ஆகியோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ” அதிமுக பொதுக்குழுவில் திருத்தப்பட்ட சட்ட விதிகளை எதிர்த்து நாங்கள் தொடர்ந்துள்ள வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் அதிமுகவின் பொதுச் செயலாளராக பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருப்பது தவறானது மட்டுமின்றி சட்டவிரோதமானது. எனவே தேர்தல் ஆணைய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி புருஷேந்திரகுமார் கவுரவ் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், அதிமுக, பழனிசாமி ஆகியோர் 6 வார காலத்துக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து, விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE