அவினாசி அருகே மேம்பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் தெக்கலூர் மேம்பாலத்திலிருந்து கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலியாகினர். கார் ஓட்டுனர் பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் இருந்து இன்று (செப். 22) காலை சொகுசு கார் ஒன்று கோவை விமானநிலையத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தது. காரில் ஓட்டுநர் உட்பட 6 பேர் பயணித்தனர். அவர்கள் பயணித்த கார் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தெக்கலூர் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது, அதே மேம்பாலத்தில் எதிர்த்திசையில் ஈரோட்டிலிருந்து கோவை நோக்கி பேருந்து ஒன்று வந்தது. எதிர்பாராத விதமாக காரும், பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. பஸ் மோதிய வேகத்தில் கார் 50 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்தது.

இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் பலியாகினர். ஓட்டுனர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அவினாசி போலீஸார், தீயணைப்பு துறையினர் விபத்தில் இறந்த 5 பேரின் உடல்களையும் மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாநாட்டுக்குச் செல்லும் வழியில் சோகம்:

இந்த விபத்தில், நாமக்கல் பள்ளிப்பாளையம் அதிமுக ஒன்றியச் செயலாளரும் திருச்செங்கோடு வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவருமான கந்தசாமி (50),

திருச்செங்கோடு வேளாண் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் ஜேம்ஸ் (55), திருச்செங்கோடு வேளாண் கூட்டுறவு சங்க இயக்குநர் கதிர்வேல் (38), ரத்தினம் (48) உட்பட 5 பேர் பலியாகினர். இவர்கள் அனைவரும் டெல்லியில் நடைபெறவுள்ள கூட்டுறவு சங்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கோவை விமான நிலையத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்