மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: பிரதமரின் வாக்குறுதிகளுக்குமுரணாக குற்றம்சாட்டப்பட்டோரை பாதுகாப்பதே பாஜகவின் அடையாளமாக உள்ளது. மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் மீதுமல்யுத்த வீராங்கனைகள் பாலியல்குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 13 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இப்போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யும் வரைபோராட்டம் தொடரும் என்று மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், மல்யுத்த வீரர்களுக்கு கடந்த மே 1-ம் தேதி தனது ஆதரவை தெரிவித்தார்.

இந்நிலையில், அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘தங்கள் சாதனைகளால் நாட்டுக்கே பெருமை தேடித் தந்த நமதுமல்யுத்த வீரர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் பெரும் அநீதியைக் கண்டு அதிர்ச்சி அடைகிறோம். இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பெண்களுக்கு அதிகாரமளிப்பதை பற்றி பிரதமர் தொடர்ந்து பிரசங்கம் செய்கிறார். ஆனால் அவரது பொய் வாக்குறுதிகளுக்கு முரணாக, கத்துவா, உன்னாவ், ஹாத்ரஸ், பில்கிஸ் பானு என பலவழக்குகளிலும் பாதிக்கப்பட்டோருக்கு தொல்லை அளிப்பதும், குற்றம்சாட்டப்பட்டோரை பாதுகாப்பதுமே பாஜகவின் அடையாளமாக இருக்கிறது. நமது மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE