சென்னை: வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானாவில் இருந்து போஜராஜாநகர் வரை மாநகராட்சி சார்பில் சுரங்கப்பாதை அமைப்பதால் அப்பகுதிகளில் இன்றுமுதல் (மே 5) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் வெளியிட்ட அறிவிப்பு:
கண்ணன் ரவுண்டானாவிலிருந்து வெளியே செல்லும் வாகனங்கள் கண்ணன் தெரு வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கண்ணன் ரவுண்டானாவிலிருந்து கண்ணன் தெருவுக்குச் செல்லும் இருசக்கர வாகனங்கள் பரசுராமன் தெரு - தர்மராஜா கோவில் தெற்குப் பாதை வழியாக கண்ணன் சாலையை சென்றடையலாம்.
கண்ணன் ரவுண்டானாவிலிருந்து கண்ணன் தெருவுக்குச் செல்லும்இலகுரக மோட்டார் வாகனங்கள் திருவெற்றியூர் சாலை - எம்.எஸ்.நாயுடு தெரு - சின்ன முனுசாமி தெரு வழியாக கண்ணன் சாலையை அடையலாம்.
போஜராஜா நகர் செல்ல விரும்பும் கனரக வாகனங்கள் சிபி ரோடு -கொருக்குப்பேட்டை ரயில்வே கேட் - கண்ணன் தெரு - போஜராஜா நகர் ரயில்வே கேட் வழியாக போஜராஜா நகரை அடையலாம். கண்ணன் தெருவில் இருந்து கண்ணன் ரவுண்டானா வழியாக வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
» அதிமுகவில் இணைவதற்கு தூது விட்டேனா?; பழனிசாமி கூறுவது உண்மையல்ல - ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு
» கள்ளச் சந்தையில் மது விற்கும் நபரிடம் லஞ்சம் - 2 காவலர்கள் பணியிடை நீக்கம்
கண்ணன் தெருவில்இருந்து கண்ணன் ரவுண்டானாவுக்குச் செல்ல விரும்பும் வாகனங்கள் சின்ன முனுசாமி தெரு - எம்.எஸ். நாயுடு தெரு - சாலை வழியாககண்ணன் ரவுண்டானாவை அடையலாம் என்று அறிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
6 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago