சென்னை: தமிழகத்தில் நீரிழிவு, ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்ற பிரிவில் எம்டி படிப்பை வரும் கல்வி ஆண்டிலேயே தொடங்க அனுமதி அளிக்க கோரி மத்திய அமைச்சருக்கு மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதி உள்ளார்.
இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில்தான் அதிக அளவில் நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். அந்தவகையில், 7.7 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நீரிழிவு நோயின் பாதிப்பு சுமார் 10.4 சதவீதமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, மாநில மற்றும் மத்திய அரசுகள் தங்கள் சுகாதாரக் கொள்கைகளில் நீரிழிவு போன்ற தொற்றாத நோய்களைக் கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.
எனவே, நீரிழிவு நோய் தொடர்பான எம்.டி. (நீரிழிவு, ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றம்) படிப்பைத் தொடங்குவதன் மூலம், நாட்டில் இந்தச் சிறப்புத் துறையில் சுகாதார வல்லுநர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.
» மணிப்பூரில் ராணுவத்தினர் தீவிர ரோந்து - கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு
» திமுக 2 ஆண்டுகள் ஆட்சி | ‘திராவிட மாடல்’ அரசின் திசைவழி எது?
அதேபோல், நாட்டிலுள்ள அனைத்து சுகாதார மையங்களிலும், மாநில மற்றும் மத்திய அரசின், நீரிழிவு சிகிச்சை பிரிவுகளை உருவாக்கும் கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்தவும் முடியும். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட புற மருத்துவமனைகளிலும் நீரிழிவு சிகிச்சை பிரிவுகளை உருவாக்கவும் இது உதவும். சென்னை மருத்துவக் கல்லூரியில் 1986-ம் ஆண்டு முழுநேர 2 ஆண்டு நீரிழிவு டிப்ளமோ படிப்பு தொடங்கப்பட்டது.
எனவே, எம்.டி. (நீரிழிவு, ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றம்) பாடத்திட்டத்தை உருவாக்குவதால், ஏற்கெனவே உள்ள நீரிழிவு மருத்துவத்தில் உள்ள டிப்ளமோ இருக்கைகளை பட்டப்படிப்பு இடங்களாக மாற்றலாம். இதனால் தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி, இந்த சிறப்புப் பிரிவில் அதிக எண்ணிக்கையிலான பேராசிரியர்கள் உருவாகுவர்.
எம்.டி. (நீரிழிவு, ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றம்) பாடத்திட்டத்தை முதுநிலை மருத்துவக் கல்வி விதிமுறைகள் (PGMER, 2000) அட்டவணையில் தேசிய மருத்துவ ஆணையம் சேர்த்தால், தற்போதுள்ள நீரிழிவு மருத்துவத்தில் டிப்ளமோ இருக்கைகள் எம்.டி. பட்டப்படிப்பு இடங்களாக மாற்றப்படலாம்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் இப்படிப்பை தொடங்குவதற்கு, தமிழக அரசு, தேசிய மருத்துவ ஆணையத்துக்கு ஒரு கருத்துருவை அனுப்பி தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், இதனை தேசிய மருத்துவ ஆணையம் ஏற்கவில்லை.
இதையடுத்து, தேசிய மருத்துவ ஆணையத்திடம் தேவையான உத்தரவுகளை பிறப்பிக்குமாறு தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. எனவே, வரும் கல்வியாண்டிலேயே இப்படிப்பை தொடங்குவதற்கு தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சென்னை மருத்துவ கல்லூரியில் 1986-ம் ஆண்டு முழுநேர 2 ஆண்டு நீரிழிவு டிப்ளமோ படிப்பு தொடங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago