தகுதி நீக்க விவகாரத்தில் சட்டப்பேரவையும், நீதிமன்றங்களும் தான் முடிவெடுக்க முடியும் என முன்னாள் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.
தகுதி நீக்க விவகாரத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து முன்னாள் தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் தி இந்து தமிழ் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:
18 பேர் தகுதி நீக்கம் சாத்தியமா?
இது போன்ற விஷயங்களை நான் அணுகியதில்லை. எங்கள் வரைமுறைக்கும் வராத ஒன்று இது. சட்டப்பேரவை தலைவர் அதையும் கடந்து போனால் நீதிமன்றம் தான் இதில் எதையும் தெரிவிக்க முடியும்.
நீதிமன்ற வழக்கு இருக்கும் இடைப்பட்ட காலத்தில் சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா?
உயர்நீதிமன்றம் தீர்ப்பு கொடுக்கும் பட்சத்தில் மாற்றுக்கருத்து உள்ளவர்கள் உச்சநீதிமன்றம் போகலாம். அது நடைமுறைதான். ஆகவே இப்போதுள்ள நிலை அப்படியே தொடரும் என்றுதான் நினைக்கிறேன்.
மிகக்குழப்பான ஒரு சூழ்நிலைதான். இதில் எந்த கருத்தையும் சொல்ல முடியாது. இது போன்ற பல சிக்கல்கள் வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் வந்துள்ளது. எதையும் நீதிமன்றம் மட்டுமே தீர்மானிக்க முடியும். தேர்தல் ஆணைய வரம்பிற்குள் வராது.
இவ்வாறு நரேஷ் குப்தா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago