ஸ்டெர்லைட் ஆலை வழக்குகள் ஆக.22, 23-ல் விசாரித்து முடிக்கப்படும்: உச்ச நீதிமன்றம் 

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து வழக்குகளும் ஆகஸ்ட் 22 மற்றும் 23ம் தேதிகளில் விசாரித்து முடிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆலையை தற்காலிகமாக திறக்கவோ அல்லது பராமரிக்கவோ அனுமதி வழங்க மறுத்தது. ஆனால் கரோனா காலகட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்ள தற்காலிகமாக அனுமதி வழங்கியது. அதன்பிறகு ஆலை மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில், ஆலை நிர்வாகத்தில் பராமரிப்பு பணியை மேற்கொள்ளவும், ஜிப்சம் உள்ளிட்ட பொருட்களை எடுக்கவும் அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், " நிபுணர்குழு பரிந்துரை அடிப்படையில் கூடுதல் பரமரிப்பு பணி உள்ளிட்ட விவகாரங்களில் ஆராய்ந்து முடிவெடுக்கப்பட உள்ளது. எனவே இந்த வழக்கின் விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.

அப்போது குறுக்கிட்ட ஸ்டெர்லைட் ஆலை தரப்பு மூத்த வழக்கறிஞர், "இந்த வழக்கில் ஆலையை திறப்பது தொடர்பான பிரதான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும். ஏனென்றால், அந்த ஆலையில் 4000 கோடிக்கான முதலீடு உள்ளது. ஆலையை நம்பி ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதரம் உள்ளது.

மேலும், நிபுணர்கள் குழு உத்தரவின் அடிப்படையில், வழங்கப்பட வேண்டிய இடைக்கால அனுமதிகள் அதாவது, ஜிப்சம் உள்ளிட்ட ரசாயண கழிவுகளை நீக்குவது, கிரீன் பெல்ட் பராமரிப்பு மற்றும் கூடுதல் பராமரிப்பு பணிகள் உள்ளிட்டவற்றை அனுமதிக்க வேண்டுமென, கடந்த ஏப்ரல் 10ம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை" என்று வாதிட்டார்.

அதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு, "உச்ச நீதிமன்ற உத்தரவை அரசு படிப்படியாக செயல்படுத்த உள்ளது. வரும் ஜூன் 1ம் தேதிக்குள் உத்தரவு அமல்படுத்தப்படும்" என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கடந்த ஏப்ரல் 10ம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை ஜூன் 1ம் தேதிக்குள் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், ஆலையை மூடியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தொடர்புடைய அரசாணைகள், ஆவணங்கள் மற்றும் குறுகிய எழுத்துபூர்வ வாதங்களை ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் உள்ளிட்ட அனைத்து தரப்பும் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து மனுக்களையும் ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய இரு தேதிகளில் விசாரித்து முடிக்கப்படும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்