சென்னை: டாஸ்மாக் கடைகளில் உள்ள தானியங்கி இயந்திரங்கள் மூலம் மது விற்பனை செய்ய தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், "நாட்டில் பல்வேறு குற்றங்களுக்கு முக்கிய காரணம் மது. சமீப காலங்களில் பெண்களும் மது அருந்துவது கவலை அளிக்கிறது. தமிழக அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் புதுச்சேரி இந்திராகாந்தி மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், 15 முதல் 17 வயதுடைய மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் 50 சதவீதம் பேர் மது அருந்தியுள்ளது தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, 21 வயது பூர்த்தி அடையாதவர்களுக்கு மது விற்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறி 21 வயதுக்கும் குறைந்வர்களுக்கு மது விற்றவர்கள் தண்டிக்கப்படவில்லை. எனவே, 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்கக் கூடாது. இதை மீறுவோரை தண்டிக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு மதுபானம் விற்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு எதிராக வழக்கு பதிந்து, குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவிட வேண்டும்.
சென்னையில் 4 இடங்களில் தானியங்கி மது விற்பனை இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 800 இடங்களில் இந்த இயந்திரங்களை அமைக்கப்படவுள்ளது.
இது மாணவர்கள் எளிதில் மதுவைப் பெற வகை செய்யும். எனவே, தானியங்கி இயந்திரங்கள் மூலம் மது விற்க தடை விதிக்க வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.
» மணிப்பூர் வன்முறை | கலவரக்காரர்களை கண்டதும் சுட மாநில அரசு உத்தரவு
» தனித்துவம், தன்னாட்சி அதிகாரத்தை இழந்த சென்னை மாநகராட்சி: முடிவுக்கு வந்த 100 ஆண்டு பழமையான சட்டம்
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், "டாஸ்மாக் கடைகளுக்குள் தான் இந்த தானியங்கி விற்பனை இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. அங்கு யார் வேண்டுமானாலும் மது வாங்கலாம் என்ற தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த தானியங்கி மது விற்பனை இயந்திரங்களில் மது வாங்க வருபவர்களைக் கண்காணிக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்கப்படமாட்டாது. இதுதொடர்பாக சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மனுவில் எந்த தகுதியும் இல்லை எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago