சித்ரா பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு 4,500 சிறப்பு பேருந்துகள்

By செய்திப்பிரிவு

சென்னை: சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு இன்றும் நாளையும் 4,500 சிறப்புப் பேருந்துகள்இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: சித்ரா பவுர்ணமியை ஒட்டி கிரிவலம் செல்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கானோர் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, பக்தர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில்கூடுதலாக 1000 பேருந்துகளும், சென்னை, கும்பகோணம், சேலம், கோவை, மதுரை போக்குவரத்து கழகங்களின் சார்பில் 1,500 கூடுதல் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

அதன்படி இன்றும், நாளையும் வழக்கமான பேருந்துகளுடன் திருவண்ணாமலைக்கு 4,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, கோவை, மதுரை, தஞ்சாவூர், தருமபுரி, ஓசூர்,திருச்சி, புதுச்சேரி, கடலூர், மதுரைஉள்ளிட்ட நகரங்களில் இருந்தும் இயக்கப்படும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE