வேங்கைவயல் சம்பவம்: டிஎன்ஏ பரிசோதனைக்காக மேலும் 10 பேருக்கு சம்மன்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள மேலும் 10 பேருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக வேங்கைவயல், இறையூர், முட்டுக்காடு பகுதிகளைச் சேர்ந்த 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்காக ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டது.

அதில் 3 பேர் மட்டும் டிஎன்ஏ பரிசோதனைக்கு முன்வந்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அண்மையில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள மேலும்10 பேருக்கு சிபிசிஐடி போலீஸார் தற்போது சம்மன் அனுப்பி உள்ளனர். இவர்களுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஓரிரு நாட்களில் ரத்த மாதிரி சேகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்