கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய எம்எல்ஏ

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் அறிவித்து 4 நாட்களில் ரூ.10 லட்சம் நிதி வழங்கி உறுதி மொழியை நிறைவேற்றிய எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகனுக்கு பேராசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற்ற ஆண்டு விழாவில் பேசிய கல்லூரி முதல்வர், எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் பெயரில் அறக்கட்டளை நிறுவி மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்க வேண்டும் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்து பேசிய எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் அரசு ஆண்கள் கல்லூரிக்கு ரூ.10 லட்சம் வழங்குகிறேன் என உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து, அவர் அளித்த உறுதி மொழியை நிறைவேற்றும் வகையில், அக்கல்லூரியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 பாடங்களில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு அறக்கட்டளை மூலம் தங்கப் பதக்கம் வழங்க தனது சொந்த நிதியிலிருந்து ரூ.10 லட்சத்திற்கான காசோலையை, கல்லூரி முதல்வர் நா.தனராஜனிடம் இன்று எம்எல்ஏ வழங்கினார்.

சாக்கோட்டை அன்பழகன் அளித்த அறக்கட்டளை வைப்புத் தொகையை வங்கியில் செலுத்தி அதன் வட்டித் தொகையிலிருந்து இனிவரும் ஆண்டுகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிப்பாடங்களில் கல்லூரியில் முதலிடம் பெறுவோருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும் என கல்லுாரி முதல்வர் நா.தனராஜன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்