சென்னை/ஆவடி: பாஜக பிரமுகர் கொலை சம்பவத்தை கண்டித்து ஆவடி மற்றும் செங்குன்றம் உட்பட தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக பட்டியலின அணி மாநில பொருளாளரான பிபிஜி டி.சங்கர், கடந்த மாதம் 27-ம் தேதி இரவு சென்னை - கொளத்தூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, காரில் தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கும்பல் ஒன்றால் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் கத்தியால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்தும் தமிழ்நாட்டில் திமுக அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறியதாக கூறி நேற்று தமிழ்நாடு முழுவதும் பாஜக பட்டியலின அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன்படி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, துணைத் தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
» டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடம்!
» ‘ஜென்டில்மேன் விளையாட்டில்’ ஜென்டிலாக மோதிக் கொண்ட கோலி, கம்பீர்
இதேபோல், ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக பட்டியலின அணியின் மாநில துணை தலைவர் வெற்றிவேல், மாவட்ட தலைவர் சந்தோஷ் உள்ளிட்டோரும், செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்எம்ஆர் ஜானகிராமன், மாநில அரசு தொடர்பு பிரிவு தலைவர் பாஸ்கரன், மாவட்ட தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago