விழுப்புரம்: சிறுமிகள் கூட்டாக பாலியல்வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது குறித்து, விழுப்புரத்தில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளரான சி.வி.சண்முகம் எம்.பி. நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: திமுக ஆட்சி அமைந்த இந்த 2 ஆண்டுகளில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளதாக ஆளுரிடம் புகார் அளித்துள்ளோம். மத்திய அரசிடமும் தெரிவித்துள்ளோம்.
அதற்கேற்றார் போல விழுப்புரம் மாவட்டத்தில் மிகப் பெரியசம்பவம் மூடி மறைக்கப்பட்டுள்ளது. கடந்த 26, 27-ம் தேதிகளில் விழுப்புரம் அருகில் உள்ள கிராமத்தில் 4-ம் வகுப்பு படிக்கும் சிறுமி,4 சிறுவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
அந்த நேரத்தில் தமிழக முதல்வர் விழுப்புரத்தில் உள்ளார். முதல்வர் இருக்கும் இடத்தில், ஒரு குற்றச் செயல் நடந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்காதா? இந்த விவகாரம் தற்போது வெளியே வரும்போதுதான் காவல்துறை நடவடிக்கை எடுத்து, அந்த4 சிறுவர்களை கைது செய்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் குற்றச்சம்பவங்களில் பாதிதான் வழக்கு பதிவு செய்யப்படுகிறது என்றார்.
இவ்வழக்கில். கடந்த 29-ம் தேதியே இச்சிறுவர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் காவல்துறையினர் இந்த வழக்கை வெளியில் தெரியாமல் மூடி மறைத்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பேட்டியை அடுத்து காவல்துறையினர் உரிய பத்திரிகை செய்தியை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
» ஆண்டுக்கு 3 சிலிண்டர், தினசரி அரை லிட்டர் பால்: கர்நாடக பாஜக தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகள்
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago