ராயபுரம் ஐட்ரீம் திரையரங்கில் நாடோடி பழங்குடியினருக்கு டிக்கெட் கொடுக்க மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை ராயபுரம் சூர்யநாராயணா தெருவில் ‘ஐட்ரீம்’ திரையரங்கம் உள்ளது. ராயபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ ஐட்ரீம் ஆர்.மூத்திக்கு சொந்தமான இந்த திரையரங்கியில் ‘பொன்னியின் செல்வன்-2’ படம் திரையிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த நாடோடி பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 7 பேர் நேற்று ‘ஐட்ரீம்’ திரையரங்கில் படம் பார்க்க சென்றனர். ஆனால்,அவர்களுக்கு டிக்கெட் கொடுக்க திரையரங்க ஊழியர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, ‘‘மணி வியாபாரத்துக்காக சென்னை வந்துள்ளநாங்கள், படம் பார்க்க ஆசைப்பட்டு சென்றோம். திரையரங்கில் 7 டிக்கெட் கேட்டோம். அவர்கள் 4 டிக்கெட்கள் மட்டுமே உள்ளது என்றனர். ஆனால், எங்களுக்கு பின்னர் வந்தவர்களுக்கு டிக்கெட்கொடுத்தனர். அவர்கள் டீசன்டைஎதிர்பார்க்கின்றனர். அது எங்களிடம் இல்லை’’ எனஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
» 12 மணி நேர வேலை மசோதா வாபஸ்: சென்னையில் மே தின நிகழ்ச்சியில் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்
» திமுக 2 ஆண்டுகள் ஆட்சி | சுகாதாரத் துறையின் செயல்பாடு நலமாக இருக்கிறதா?
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஐட்ரீம் திரையரங்க நிர்வாகம், ‘‘எங்கள் திரையரங்கில் தீண்டாமை கொடுமை ஏதுவும் இல்லை. ஏற்கெனவே அவர்கள் பலமுறை இந்ததிரையரங்கில் படம் பார்த்துள்ளனர். ரூ.100 டிக்கெட்டில் தனித்தனியாக சீட் இருந்ததால் அவர்கள் வாங்கவில்லை. ரூ.50 டிக்கெட் கொடுக்கப்பட்டு அவர்கள் படம் பார்த்துச் சென்றனர்’’ என தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago